அரசியல் சார்ந்து செயற்பட்டவனல்லன் நான்; அவ்வாறிருந்தால் நிரூபித்துக் காட்டட்டும்! பிரிவுபசாரததின்போது வேதநாயகன் சவால்

அரசியல் அபிலாசைகள் இருக்கின்றனவே தவிர தான் ஓர் அரசியல் கட்சியினை சேர்ந்தவன் அல்லன் எனவும், தான் எந்தவோர் அரசியல் கட்சி சார்பாகவும் செயற்பட்டவனல்லன் எனவும் ஓய்வு பெற்று செல்லும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றி இடமாற்றம் அறிவிக்கப்பட்டதன் காரணமாக தனது ஓய்வை அறிவித்து அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் நாகலிங்கம் வேதநாயகனின் பிரிவுபசார நிகழ்வு யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தனது சேவையினை தான் நேர்மையாகவே ஆற்றினார் எனவும், தான் ஓர் அரசியல் கட்சி சார்ந்து வேலை செய்தேன் என யாராவது நிரூபிக்க முடிந்தால் நிரூபித்து காட்டட்டும் எனவும் நா.வேதநாயகன் சவால் விடுத்துள்ளார்.

பலர் வந்து தன்னிடம் தேர்தலில் போட்டியிட போகின்றீர்களா என கேட்டனர் எனவும் அவ்வாறு ஒரு முடிவு தன்னிடம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக நாகலிங்கம் வேதநாயகன் தனது கடமையினை பொறுப்பேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share the Post

You May Also Like