தமிழரசு மட்டு வாலிபர் முன்னணிச் செயலாளர் சமாதான நீதவானாகச் சத்தியப் பிரமாணம்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணிச் செயலாளர் கணேசமூர்த்தி சசீந்திரன் நேற்றையதினம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.சி.றிஸ்வான் அவர்களின் முன்னிலையில் சமாதான நீதவானாகச் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

மட்டக்களப்பு துறைநீலாவணையைச் சேர்ந்த இவர், மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் சேவை அதிகாரியாகக் கடமை புரிகின்றார்.

இவர் ஆரம்பக்கல்வியை துறைநீலாவணை மெதடிஸ்த மிசன் தமிழ்க் கலவன் பாடசாலையிலும், உயர்தரம் கலைப்பிரிவு துறைநீலாவணை மகா வித்தியாலயத்திலும் கற்றவர்.

துறைநீலாவணை நவசக்தி இளைஞர் கழக ஸ்தாபகரான இவர், அக்கழகத்தின் தலைவர், செயலாளர் போன்ற பதவிகளை வகித்துள்ளதுடன், 2010ல் நடைபெற்ற இலங்கையின் முதலாவது இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மண்முனை தென்எருவில் பற்று இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டவர். அத்தோடு 2009 தொடக்கம் 2012 வரையான காலப்பகுதிகளில் மட்டக்களப்பு, அம்பாறை நேத்திரா இளைஞர் ஒன்றியத்தின் தலைவராகவும் செயற்பட்டவராவார்.

இவர் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணிச் செயலாளராக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share the Post

You May Also Like