முல்லையில், ரெலோவின் மாவட்ட பணிமனை திறப்பு

விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவில் – தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அமைப்பினுடைய மாவட்ட பணிமனை 15.02 இன்றைய நாள் திறந்துவைக்கப்பட்டது.

முல்லைத்தீவு – உணாப்பிலவுப் பகுதியில் அமைந்துள்ள குறித்த மாவட்டப் பணிமனையினை, ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநான் திறந்துவைத்தார்.

குறிப்பாக இந் நிகழ்வில் விருந்தினர் வரவேற்பு, மங்கல விளக்கேற்றல், கொடியேறல் என்பவற்றைத் தொடர்ந்து குறித்த மாவட்டப் பணிமனை திறந்துவைக்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான து.ரவிகரன், மயூரன், கரைதுறைப்பற்று பிரதேசசபைத் தவிசாளர் க.தவராசா, புதுக்குடியிருப்புப் பிரதேசசபையின் உபதவிசாளர் க.ஜனமேஜயந்த், மற்றும் பிரதேசசபைகளின் உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share the Post

You May Also Like