களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையை அழகுபடுத்திய தமிழரசு மட்டு வாலிப முன்னணி!

 களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளிநோயாளர் வரவேற்பு மண்டபம், மருத்துவ சிகிச்சை விடுதி, மருந்து வழங்கும் அறை தாதியர் அறை மற்றும் பல அறைகளுக்கு  வர்ணம் பூசி அழகுபடுத்தியது   இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணி.
சிரமதான அடிப்படையில் நடைபெற்ற இந்த வேலைத்திட்டத்தில் வாலிபர் முன்னணியின் தலைவர் தீபாகரன்,  மற்றும்  செயலாளர் சசீந்திரன்,  பட்டிருப்பு தொகுதி வாலிபர் முன்னணி உறுப்பினரும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளருமான இரா.சாணக்கியன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,  பட்டிருப்பு தொகுதிகிளையின் தலைவருமான பா. அரியநேந்திரன்,  முன்னாள் மாகாணசபை  உறுப்பினர் மா.நடராசா, பட்டிருப்பு தொகுதிகிளையின் பொருளாளர் த.நடராசா ஆகியோர் கலந்துகொண்டனர் .
பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் அவர்களும் வேலைத்திட்டத்தை பார்வையிட்டதுடன்,  வேலைத்திட்டத்தில் களுவாஞ்சிகுடி, எருவில், மகிழுர், மகிழுர்முனை, மயிலம்பாவெளி, போரதீவு, கல்லாறு பிரதேச இளைஞர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Share the Post

You May Also Like