சுற்று நிருபத்திற்கமையவே மாணவர்களுக்கு சிகை அலங்காரம், தவறும் சிகை அலங்கார நிலையங்களுக்கு நடவடிக்கை; பிரேம்காந்

கல்வி அமைச்சினுடைய சுற்றுநிருபத்திற்கமையவே மாணவர்களுக்கு சிகைஅலங்காரம் மேற்கொள்ளப்படவேண்டுமென புதுக்குடியிருப்பு பிரதேசசபைத் தவிசாளர் செல்லையா பிரேம்காந் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு சுற்று நிருபத்திற்கமைய மாணவர்களுக்கு சிகைஅலங்காரம் மேற்கொள்ளத் தவறும், சிகை அலங்கார நிலையங்களுக்கு உரியநடவடிக்கையினை பிரதேசசபை எடுக்கும் எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

பாடசாலை மாணவர்களுக்கான சிகை அலங்காரம் தொடர்பில் இம்மாத சபை அமர்வில் பேசப்பட்டது.

குறிப்பாக சிலமாணவர்கள் பொருத்தமற்ற முறையில் சிகை அலங்காரம் செய்து பாடசாலைக்கு செல்கின்றனர் என்னும் முறைப்பாடு சபையில் கிடைக்கப்பெற்றது.

அந்தவகையில் கல்வி அமைச்சினுடைய சுற்றுநிருபத்திற்கமைய பாடசாலை மாணவர்களுக்கான சிகை அலங்காரங்களை மேற்கொள்ளுமாறும், அதை வலியுறுத்தியும் சபையில் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது.

எனவே இது விடயம் தொடர்பில், அனைத்து சிகை அலங்கார நிலையங்களும் கவனத்துடன் செயற்படுவதோடு, கல்வி அமைச்சின் சுற்றுநிருபத்திற்கு அமையவே மாணவர்களுக்கான சிகை அலங்காரங்கள் மேற்கொள்ளப்படவேண்டும்.

அவ்வாறு கல்வி அமைச்சினுடை சுற்று நிருபத்திற்கமைய மாணவர்களுக்கு சிகைஅலங்காரம் மேற்கொள்ளத் தவறும் சிகை அலங்கார நிலையங்களுக்கு, அனுமதிப் பத்திரங்கள் வழங்கும்போது அந்த விடயங்களைக் கருத்திலெடுத்து உரிய நடவடிக்கையினை பிரதேசசபை மேற்கொள்ளும் எனவும் தெரிவித்தார்

Share the Post

You May Also Like