பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் நிதி ஒதுக்கீட்டில் இயக்கச்சி உப அஞ்சல் அலுவலகம் அமைப்பு

கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் நிர்வாக எல்லைக்கு உட்பட்ட இயக்கச்சி பிரதேசத்தில் உப அஞ்சல் அலுவலக கட்டடம் அமைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் ரூபாய் 2 மில்லியன் ஒதுக்கீடு செய்திருந்தார்.

இறுதிப்போரில் மிகவும் பாதிக்கப்பட்ட பச்சிலைப்பள்ளியின் இயக்கச்சி பிரதேசத்தில் 30 வருடங்களாக உப அஞ்சல் அலுவலகத்திற்கு ஒரு நிலையான கட்டடம் மற்றும் காணி அற்ற நிலையில்  பிரதேசத்தின் சமூக ஆர்வலர் ஒருவரால் காணி அன்பளிப்பாக வழங்கப்பட்டிருந்தது.
ஆனாலும் கட்டடம் அமைப்பதற்கான நிதி மூலம் நீண்டகாலமாக அடையாளப்படுத்தப்பட முடியாத நிலை காணப்பட்டது
குறித்த விடயம் தொடர்பாக வட்டாரத்தினர் பிரதேச சபை உறுப்பினர் ரமேஷ் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்றார்
இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினரால் குறித்த கட்டடம் அமைப்பதற்கு ரூபாய் 2 மில்லியன் ஒதுக்கீடு செய்து புனரமைப்புப் பணிகளும் தற்போது நிறைவு பெற்றுள்ளது.
குறித்த புனரமைப்பு பணிகள் தொடர்பாக பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் உறுப்பினர்களான ரமேஷ் வீரவாகுதேவர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
குறித்த பிரதேச மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கு மிகவும் நன்றிக்கடன் உடையவர்களாகவும் அவருடைய சேவைகளை பாராட்டுவதா கவும் தெரிவித்துள்ளனர்.
Share the Post

You May Also Like