கனவு காணுங்கள் விக்கி அய்யா!

2013 மாகாணசபை தேர்தலில் ஒரு புது முகம், பக்தி பரவசத்துடன் மக்கள் முன்னே வந்தபொழுது,

அவர் யார் என்று நாங்கள் கேட்கவில்லை! எந்த இடத்தில் இருந்து வந்தார் என்று கேட்கவில்லை!
அவர் பின்புலம் என்ன என்று பார்க்கவில்லை!
இவரால் தமிழர்களுக்கு நன்மை என்று நம்பியது இல்லை!

நாம் நம்பியது தமிழரசு என்னும் விருட்சதை மட்டுமே, அந்த நாட்கள் வெல்லவேண்டும் என்ற எண்ணமும், வென்றாக வேண்டும் என்ற கட்டாயமும் இருந்ததது, இரவிராவாக முழித்து இருந்து வென்றுவிட்ட சந்தோஷம்,
அந்த இடத்தில் உங்களுக்கு பதிலாக யார் நின்று இருந்தாலும் வெற்றிக்கு ஒரே முகம் அது தமிழரசு மட்டுமே,

உங்களின் மீது இன்றும் நல்ல மரியாதை உள்ளது, பல காரணங்கள் சொல்லி நீங்கள் வெளியேறி சென்றாலும், அது உங்களின் பதவி ஆசையை மட்டுமே எங்களுக்கு காட்டியது, இன்று தமிழரசை ஆட்டம் காணவைக்கும் நிகழ்சி நிரலில் நீங்கள் கூட்டணி அமைத்து இயங்குவது உங்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையில் மேலும் விரிசலை உண்டாக்கும் என்பதை வரும் பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் உணர்வீர்கள், நீங்கள் சுயேட்சையாக நின்று கேட்டால் கிடைக்கும் வாக்குகள் கூட இந்த கூட்டணியில் உங்களுக்கு கிடைக்கப்போவது இல்லை,

இதே கருத்தியல் கூறி பிரிந்து சைக்கிள் எடுத்து சென்றவர்கள் இன்று இடைநடுவில் காற்று போய் நிற்பதை நீங்கள் அறிவீர்கள், பலர் கூடியிருக்கும் கூடத்தில் எல்லோரும் ஒரே கருத்தியல் உடன் இருக்க மாட்டார்கள், தவறுகள், இல்லாத இடங்களும் இல்லை, ஆளுக்கு ஒரு கட்சி, ஆளுக்கு ஒரு அமைப்பு என்று அரசியல் பதவி ஆசை அதிகரித்து நிற்பது என்னமோ உண்மைதான்,

மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள் என்று நினைக்கிறேன், மக்களின் உரிமைகளை கருத்தில் கொண்டு ஒன்றுபட்டு பயணிக்க முடியாத நீங்கள் சிங்களவனிடம் அதை பெறுவேன் இதை பெறுவேன் என்று சொல்வதை நம்ப மக்கள் ஒன்றும் மந்தைகள் அல்ல!

காரையூர் சுரேஷ்

Share the Post

You May Also Like