கூட்டமைப்பின் சமகால் அரசியல் ஆய்வு பருத்தித்துறையில்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சமகால அரசியல் ஆய்வு 01-03-2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30 மணிக்கு மாலைச் சந்தை பிள்ளையார் கோயில் திருமணமண்டபத்தில் நடைபெற உள்ளது.

கடந்த நான்கரை வருடங்களில் கடந்துவந்த பாதை எனும் கருப்பொருளில் இலங்கைத் தமிழரசுக் கட்சி உடுப்பிட்டி தொகுதித் தலைவர் கு.சுரேந்திரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த அரசியல் ஆய்வில், வரவேற்புரையை வடமராட்சி தெற்கு, மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் த.ஐங்கரனும், தொடக்கவுரையை வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தனும் வழங்குவர்.

சிறப்புரைகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சோ.சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், ஈ.சரவணபவன், த.சித்தார்த்தன் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவி திருமதி மதனி நெல்சன் ஆகியோர் வழங்குவர்.

நன்றியுரையை இலங்கைத் தமிழரசுக் கட்சி உடுப்பிட்டி தொகுதிக்கிளை செயலாளர் வே.சிவயோகமும், நிகழ்ச்சித் தொகுப்பை பருத்தித்துறை பிரதேசசபை உப தவிசாளர் கு.தினேஷூம் வழங்குவர்.

Share the Post

You May Also Like