” தமிழர்கள் பிரிந்து தனி நாடு கோர நேரிடலாம் : இரண்டாம் தரப்பிரஜைகளாக நடத்தப்பட்டால்… அரசின் போக்கு குறித்து சுமந்திரன் காட்டம் “ – – என்ற செய்’தி திருத்தம்

திருத்தம் : ” தமிழர்கள் பிரிந்து தனி நாடு கோர நேரிடலாம் : இரண்டாம் தரப்பிரஜைகளாக நடத்தப்பட்டால்… அரசின் போக்கு குறித்து சுமந்திரன் காட்டம் “
கடந்த 28ஆம் திகதி புதியசுதந்திரன் இணையத்தளத்தில் வெளியாகிய  ” தமிழர்கள் பிரிந்து தனி நாடு கோர நேரிடலாம் : இரண்டாம் தரப்பிரஜைகளாக நடத்தப்பட்டால்…   அரசின் போக்கு குறித்து சுமந்திரன் காட்டம் “ என்ற தலைப்பில் வெளியாகிய செய்தியில் குறிப்பிட்ட படி, நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் அவ்வாறு தெரிவிக்கவில்லை.
ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவிக்கும்போது ” சர்வதேச நடவடிக்கைகளைக் கொண்டு நாட்டைப் பிளவு படுத்துவதற்கு நீங்கள் முயற்சி செய்கின்றீர்கள் , நீங்கள் அதற்காகத்தான் தூபமிடுகின்றீர்கள் என்று பெரும்பாலான சிங்கள ஊடகங்கள் மத்தியிலே கருத்துண்டு அது தொடர்பான உங்கள் இதய சுத்தியான பதில் என்ன?” என்று செவ்வி கண்டவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
அந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும்போது ,
“நாங்கள் நாட்டைப் பிரிக்க வேண்டும் என்று கேட்கவில்லை. நாங்கள் ஒரே நாட்டுக்குள் வாழ்வதற்கு எங்களுடைய சம்மதத்தைக் கொடுத்திருக்கின்றோம். நாங்கள் ஒரே நாட்டுக்குள் வாழ்வதற்கு தயார் என்று சொல்லும் அதே நேரத்தில் சில நிபந்தனைகளைத் தெரிவிக்கின்றோம். பேரினவாத நாட்டுக்குள் இரண்டாம்தரப் பிரஜைகளாக வாழ்வதற்கு நாங்கள் தயார் இல்லை. உரிய அரசியல் அதிகாரங்கள் எங்களுடைய கைகளில் கொடுக்கப்பட்டு அது பகிரப்பட்டு நடத்தப்படுமாக இருந்தால் நாங்கள் ஒரே நாட்டுக்குள் வாழ்வதற்கு தயார்.
ஆகவே அந்தத் தீர்மானம் எங்களுடைய கைகளிலே இல்லை . அது அரசாங்கத்தின் கைகளிலேயே தங்கியுள்ளது.
இல்லை நாங்கள் அவர்களை இரண்டாம் தரப் பிரஜைகளாகத்தான் நடத்துவோம்
அவர்களுடைய கைகளில் எந்த அரச அதிகாரமும் செல்வதற்கு இடமளிக்க மாட்டோம் என்றால் பிரிவதை எவரும் தடுக்க முடியாது.
ஆனால் எங்களுடைய நிலைப்பாடு பிரிவினை அல்ல. ஒரே நாட்டுக்குள்ளே இந்த சமத்துவம் அதிகாரப் பகிர்வு – நாங்கள் ஒரே மக்கள்.
ஆகையினாலே எங்களை நாங்கள் ஆள்வதற்கான தகுதி சர்வதேச சட்டத்திலே இருக்கின்றது. இலங்கை  அரசாங்கம் ஏற்று நடவடிக்கை எடுக்குமாக இருந்தால் நாங்கள் ஒரே நாட்டுக்குள் வாழ்வதற்குத் தயார்.”
என்று குறிப்பிட்டிருந்தார் .
அந்த செய்தி எமது இணையத்தளத்தில் ” தமிழர்கள் பிரிந்து தனி நாடு கோர நேரிடலாம் : இரண்டாம் தரப்பிரஜைகளாக நடத்தப்பட்டால்… அரசின் போக்கு குறித்து சுமந்திரன் காட்டம் “ என்த் தவறுதலாகத் தலைப்பிடப்பட்டு வெளியாகியுள்ளது. தவறுக்கு வருந்துகின்றோம்.
குறித்த நேர்காணலில் – இந்தக் கேள்வி – பதிலின் காணொலி வடிவத்தை இங்கு இணைத்திருக்கிறோம்

சுமந்திரனின் செவ்வி

Posted by New Suthanthiran on Saturday, February 29, 2020

Share the Post

You May Also Like