கொழும்பில் கூட்டமைப்பு போட்டி: தமிழரசுக் கிளை கூடி ஏகமுடிவு!

எதிர்வரும்பொதுத்தேர்தலில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொழும்பில் போட்டியிடுவதா, இல்லையா என்பது குறித்து நாளை கொழும்பில் நடக்கும் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் நியமனக் குழுக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் எனக் கூட்டமைப் பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம் பெற்ற தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைக் கூட்டத்தி லேயே அவர் இவ்வாறு கூறினார்.

கொழும்புமாவட்டத்தில் இலங் கைத் தமிழரசுக் கட்சி எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் மாவட்டக்கிளைநேற்று மீண்டும் பம்பலப்பிட்டி மாடிமனை சமூக மண்டபத்தில் கூடி ஆராந்தது.

கிளைத் தலைவர் கே.வி.தவராசா தலைமையில் நடைபெற்ற இந்தச்சிறப்புக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில். எம்.ஏ.சுமந்திரன்கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்.

கொழும்பில் வதியும் அனைத்துத் தமிழர்களின் சார்பில் அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்ய வேண்டிய தார்மீகப் பொறுப்பு தமிழரசுக் கட்சிக்கு உண்டு என்பது கூட்டத்தில் கலந்துகொண்ட பலராலும் வலியுறுத்தப்பட்டது.

எதிர்வரும்6ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பில் கட்சியின் நியமனக்குழுகூடவுள்ளது. அதன்போது இந்தக்கருத்துக்கள் அனைத்தும் முன்வைக்கப்படும் என்றும், எந்தெந்த மாவட்டங்க ளில் போட்டியிடுவது என்றும் குறிப்பாக கொழும்பில் போட்டியிடுவதுதொடர்பிலும் இறுதித் தீர்மானம் எடுத்து கொழும்புக் கிளைக்கு அறியத்தருவதாக சுமந்திரன் தெரிவித்தார்.

சென்ற ஜனவரி மாதத்தில் கூடிய மாவட்டக் கிளை உறுப் பினர்கள் தெரிவித்த கருத்துக்களுடன் ஒப்பிடுகையில் நேற்றுய் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களில் தேர்தலில் போட்டியிட வேண் டுமென்ற கருத்து தீவிரமாக உள்ளதைத் நாம் அறியக்கூடியதாக இருந்ததைச் சுட்டிக்காட்டிய சுமந்திரன், இக் கருத்துக்கள் யாவும் மிகுந்த கரிசனையுடன் ஆராயப் படும் என உறுதியளித்தார்.

கிளைச்செயலாளர் ஆர்னல்ட் பிரியந்தன் வரவேற்புரை நிகழ்த்தினார். சி. இரத்தினவடிவேல் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுற்றது

Share the Post

You May Also Like