புங்குடுதீவில் 38 அபிவிருத்திக்கு 446 லட்சம் ரூபா ஒதுக்கினார் சிறி!

புங்குடுதீவின் வரலாற்றில் என்றுமில்லாதவாறு எமது பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களால் தீவகத்தின் ஊர் எழுச்சி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் புங்குடுதீவு பிரதேசத்தில் 17 வீதிகளின் புனரமைப்புக்கென 340 இலட்சம் (34 மில்லியன்) ரூபாவும், 5 ஆலயங்களின் புனரமைப்புக்கென 17 இலட்சம் (1.7 மில்லியன்) ரூபாவும், 4 குளங்களின் புனரமைப்புக்கென 40 இலட்சம் (4 மில்லியன்) ரூபாவும், 7 பாடசாலைகளின் புனரமைப்புக்கென 25 இலட்சம் (2.5 மில்லியன்) ரூபாவும், ஒரு விளையாட்டுக்கழக மைதான புனரமைப்புக்கென 8 இலட்சம் (0.8 மில்லியன்) ரூபாவுமாக மொத்தமாக 38 அபிவிருத்தித் திட்டங்களுக்காக 446 இலட்சம் (40.46 மில்லியன்) ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது…

நிதி ஒதுக்கப்பட்ட வீதிகள்…
1) ஞானவைரவர் வீதி புனரமைப்பு (20 இலட்சம்)
2) நாயன்மார் வீதி புனரமைப்பு (20 இலட்சம்)
3) பசுபதிப்பிள்ளை வீதி புனரமைப்பு (20 இலட்சம்)
4) கோட்டைக்காடு வீதி புனரமைப்பு (20 இலட்சம்)
5) தம்பனை வீதி புனரமைப்பு (20 இலட்சம்)
6) அடகாத்த வீதி புனரமைப்பு (20 இலட்சம்)
7) கந்தசாமி கோவில் முன் வீதி புனரமைப்பு (20 இலட்சம்)
8) கந்தாலைமுனை வீதி புனரமைப்பு (20 இலட்சம்)
9) குறிகட்டுவான் கடற்கரை வீதி புனரமைப்பு (20 இலட்சம்)
10) கேரதீவு குறுக்கு வீதி புனரமைப்பு (20 இலட்சம்)
11) கற்காட்டு வீதி புனரமைப்பு (20 இலட்சம்)
12) பாணாவிடை சிவன் கோவில் வீதி புனரமைப்பு (20 இலட்சம்)
13) நாவுண்டமலை மயான வீதி புனரமைப்பு (20 இலட்சம்)
14) ஊரதீவு கிருஸ்ணன் கோவில் வீதி புனரமைப்பு (20 இலட்சம்)
15) சங்குமால் வீதி புனரமைப்பு (Stage 1) (20 இலட்சம்)
16) சங்குமால் வீதி புனரமைப்பு (Stage 2) (20 இலட்சம்)
17) பாணாவிடை சிவன் கோவில் வீதி புனரமைப்பு (20 இலட்சம்)

நிதி ஒதுக்கப்பட்ட பாடசாலை…
1) சிறுவர் பூங்கா புனரமைப்பு – யா/புங்குடுதீவு இராஜேஸ்வரி
வித்தியாலயம் (5 இலட்சம்)
2) மலசலகூடப் புனரமைப்பு – யா/புங்குடுதீவு சிறீ சித்தி விநாயகர்
வித்தியாலயம் (1 இலட்சம்)
3) மைதானப் புனரமைப்பு – யா/புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலயம் (5 இலட்சம்)
4) மைதானப் புனரமைப்பு – யா/ஊரதீவு திருநாவுக்கரசு வித்தியாலயம் (5 இலட்சம்)
5) மைதானப் புனரமைப்பு – யா/புங்குடுதீவு சிறீ சுப்ரமணிய வித்தியாலயம் (3 இலட்சம்)
6) மைதானப் புனரமைப்பு – யா/புங்குடுதீவு வைத்திலிங்கம் வித்தியாலயம் (3 இலட்சம்)
7) மைதானப் புனரமைப்பு – யா/புங்குடுதீவு அ.மி.த.க.பாடசாலை (3 இலட்சம்)

நிதி ஒதுக்கப்பட்ட மயானம்…
1) நாவுண்டமலை மாவுத்திடல் பொது மயானம் புனரமைப்பு (50,000)

மின்னிணைப்புக்கு நிதி ஒதுக்கப்பட்ட இடங்கள்…
1) மின்னிணைப்பு வழங்கல் – சிறீமுருகன் கிராமிய கடற்றொழிலாளர்
கூட்டுறவு சங்கம்
2) புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு அண்மையிலுள்ள நீர்
சுத்திகரிக்கும் பொறித் தொகுதிக்கான (RO Plant) மின்னிணைப்பு
வழங்கல் (15 இலட்சம்)

நிதி ஒதுக்கப்பட்ட ஆலயங்கள்…
1) சோளகனோடை காளி கோவில் புனரமைப்பு (3 இலட்சம்)
2) மடத்துவெளி ஞானவைரவர் ஆலயப் புனரமைப்பு (3 இலட்சம்)
3) ஊரதீவு மீனாட்சி அம்மன் ஆலயப் புனரமைப்பு (3 இலட்சம்)
4) விட்டையம்பதி சிறீ பத்திரகாளி அம்மன் ஆலயப் புனரமைப்பு (4 இலட்சம்)
5) கேரதீவு ஐயனார் ஆலயப் புனரமைப்பு (4 இலட்சம்)

நிதி ஒதுக்கப்பட்ட குளம்…
1) புங்குடுதீவு மகாவித்தியாலயக் குளம் புனரமைப்பு (10 இலட்சம்)
2) புங்குடுதீவு தில்லைக்குளம் புனரமைப்பு (10 இலட்சம்)
3) புங்குடுதீவு நாவல்க் குளம் புனரமைப்பு (10 இலட்சம்)
4) புங்குடுதீவு அடைகாத்த குளம் புனரமைப்பு

மைதானத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி…
1) மைதானப் புனரமைப்பு – சிவலைப்பிட்டி அம்பாள் விளையாட்டுக்
கழகம் (8 இலட்சம்)

#) பொருட் கொள்வனவு – ஊரதீவு சனசமூக நிலையம் (25,000)

இவ்வாறு 38 அபிவிருத்தித் திட்டங்களுக்காக 446 இலட்சம் (40.46 மில்லியன்) ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

இதில் பல வேலைத்திட்டங்கள் நிறைவடைந்துள்ளன சில வேலைத்திட்டங்கள் தற்போது வேலைகள் நடைபெற்று வருகின்றன…

Share the Post

You May Also Like