மாவையின் நிதியில் புனரமைக்கப்பட்ட 5 வீதிகளை திறந்துவைத்தார் யாழ்.மாநகர முதல்வர்

யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மாவை சோ. சேனாதிராஜா அவர்களின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான துரித கிராம அபிவிருத்தி (கம்பெரலிய) நிதி ஒதுக்கீட்டில் யாழ் மாநகர முதல்வரின் சிபாரிசில் யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவின் ஜே 81 கிராமசேவையாளர் பிரிவில் (25 ஆம் வட்டாரத்தில்) புனரமைக்கப்பட்ட முஸ்லிம் கல்லூரி வீதி உப ஒழுங்கை, முத்தமிழ் இரு ஒழுங்கைகள், வைத்தியசாலை வீதி உப ஒழுங்கை, கற்குளம் உள்ளிட்ட 5 வீதிகள் (3) உத்தியோக பூர்வமாக மக்கள் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது.

25ஆம் வட்டார மாநகரசபை உறுப்பினர் கௌரவ என். தனேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் விருந்தினராகக் கலந்து சிறப்பித்த மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் வீதியைத் திறந்து வைத்தார்.
வீதித் திறப்பின் பின்னர் முதல்வர் தேவைகள் மட்டும் குறைபாடுகள் தொடர்பில் கலந்து கொண்டிருந்த பொது மக்களுடன் கலந்துரையாடினார்.

இந் நிகழ்வில் மாநகரசபை உறுப்பினர் எம்.எம்.எம். நிபாஹிர், வட்டார பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Share the Post

You May Also Like