2009 முதல் சுமந்திரன் என்ன செய்தார் என்பவர்களுக்காக ஒன்று……

யுத்தம் நடந்து கொண்டிருந்த காலப்பகுதி அது . அந்த நேரத்தில் கொழும்பில் தமிழர்கள் என்றாலே உடனே கைது செய் என்று எழுதப்படாத சட்டம் ஒன்று இருந்ததோ என்று எண்ண தோன்றுமளவுக்கு தமிழர்கள் கைது செய்யப்பட்டு கொண்டிருந்தார்கள் கொழும்பில் .

கைது செய்யப்படுபவர்களுக்காக ஆஜராகினால் தங்களையும் புலிகளாக கருதிவிடுவார்களோ என்று பல வழக்கறிஞர்கள் நீதி மன்றங்கள் வர பயந்து கொண்டிருந்த காலம்

2008 ஆம் ஆண்டு மரதானை பகுதியில் வசித்து வந்த தமிழர்கள் அனைவரும் பதிவு செய்ய வேண்டும் என்றும் , இங்கே வாசிப்பதற்கான அனுமதி ( விசா ) பெற்றிருக்க வேண்டும் என்றும் திடீரென்று போலீஸ் அறிவித்து அதற்கான விண்ணப்ப படிவங்களும் வழங்கியிருந்தது . ஒவ்வொருத்தரின் சொந்த வங்கி கணக்கு மற்றும் தனிப்பட்ட விவரங்கள் எல்லாம் கேட்கப்பட்ட அந்த பதிவு முறைக்கு ஏற்ப 92 பேர் வரை கைது செய்யப்பட்டுமிருந்தனர் .

இதை எதிர்த்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போட்ட வழக்கின் சார்பாக ஆஜராகி வாதாடினார் #M_Aசுமந்திரன் அவர்கள்

இவ்வாறு பதிவு செய்வது , அவர்களது கணக்கு விவரங்கள் கேட்பது மனித உரிமை மீறல் என்று வாதிட்ட சுமந்திரன் அவர்கள் இவ்வாறான நடவடிக்கைகளை உனடனடியாக நிறுத்தும்படியும் வாதாடினார்

இதை செவிமடுத்த நீதிபதி உடனடியாக சட்டமா அதிபர் சார்பாக வந்தவரிடம் கேள்வி எழுப்பிய போது அது தங்களுக்கு தெரியாமல் நடந்தது என்று கூறினார்

சுமந்திரன் அவர்களின் வாதத்தை தொடர்ந்து உடனடியாக கைது செய்யப்பட்டவர்களுக்கு வழக்கு தாக்கல் செய்யுங்கள் அல்லது விடுதலை செய்யுங்கள் என்று உத்தரவு பிறப்பித்தார் நீதிபதி

#சுமந்திரன் அவர்கள் 2009 க்கு முன் என்ன செய்தார் என்று கேட்பவர்களுக்காக அவர் செய்ததில் ஓன்று இங்கே பகிர படுகிறது

இந்த வழக்கு விவரம் தமிழ் நெட் இல் கூட வந்திருந்தது

அரசியலுக்கு வர முதலே தமிழர்களுக்காக நீதி மன்று வரை சென்று வாதாடியவர் சுமந்திரன்

அரசியலில் அவரது நிலைத்திருத்தல் என்பது எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம் ஆகும் .

எனவே அதிகூடிய வாக்குகளால் சுமந்திரன் அவர்களை பாராளுமன்றம் அனுப்புவோம்

#விடியலை_நோக்கிய_பயணம்
#M_A_சுமந்திரன்
#தமிழ்தேசியகூட்டமைப்பு

 

Share the Post

You May Also Like