தமிழ் அரசுக் கட்சியால் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம் முன்னெடுப்பு

‘இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பச்சிலைப்பள்ளி பிரதேச கிளையினால் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து எவ்வாறு பாதுகாப்பாக நடந்து கொள்வது என்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளரும் இலங்கை தமிழரசுக் கட்சியின்  வாலிபர் முன்னணியின் செயலாளருமான  சுப்பிரமணியம் சுரேன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் ஒலிபெருக்கி மூலம் மக்களை விழிப்பூட்டும் கருத்துடன் கூடிய துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.
 பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் சந்தைகள் மற்றும் வியாபார ஸ்தாபனங்களில்  துண்டு பிரசுரம் மூலமும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உப தவிசாளர் உறுப்பினர்கள் இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர் .
Share the Post

You May Also Like