அம்பாறையில் கோடீஸ்வரன் தலைமையில் களமிறங்குகிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு!

தமிழ் தேசியக் கூட்டமைப்பு திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தலைமையில் போட்டியிடுகிறது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கென இன்று (புதன்கிழமை) பகல் அம்பாறை மாவட்ட செயலகத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன் ஆகியோர் மேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் கவீந்திரன் கோடீஸ்வரன் களமிறங்குவதுடன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவராஜா கலையரசன், ஆ.தமிழ் நேசன், ஆர்.சயனொளிபவன், சின்னையா ஜெயராணி, செல்வராஜா கணேசானந்தம், எஸ்.சுந்தரலிங்கம், தாமோதரம் பிரதீபன், முருகுப்பிள்ளை ரவிகரன், எம்.பரணிதரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இம்முறை அம்பாறை மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி இரண்டு இடங்களை வெற்றி கொள்ளும் என கவீந்திரன் கோடீஸ்வரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Share the Post

You May Also Like