மாவையின் கோரிக்கையை அடுத்து நிவாரணம் வழங்குவதகு நடவடிக்கை பிரதமர் மஹிந்த இணக்கம்

கிராம சேவகர் பிரிவு மூலம் அவசர நிவாரணப் பொருட்களை விநியோகிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்பாடு செய்துள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் கோரிக்கையின் விளைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

அதன் பிரகாரம் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளுக்கும் தலா 1 மில்லியன் ரூபாய் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நிதி ஊரடங்கு உத்தரவு அமுல் உள்ள காலத்தில் தினசரி ஊதியம் பெறுபவர்களுக்கு மிகவும் உதவிகரமாக அமையும் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Share the Post

You May Also Like