சிறிதரனின் ஆலோசனையில் கிளி.மாவட்ட மக்களுக்கு உலர் உணவுகள்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின்  ஆலோசனைக்கமைய இன்றைய தினம் பளை, கரைச்சி, பூநகரி பிரதேசங்களில் தினக்கூலி வேலை செய்யும் மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

முழங்காலில், அன்புபுரம், இரணைமாதாநகர், நாச்சிக்குடா மத்தி, நாச்சிக்குடா அன்னை வேளாங்கன்னி, நாகபடுவான், ஜெயபுரம், வலைப்பாடு, நேர் அடம்பன், சாமிப்புலம், கண்டாவளை, தர்மபுரம், முரசுமோட்டை, உதயநகர், திருநகர், ஆனைவிழுந்தான், அறிவியல்நகர், உமையாள்புரம், வன்னேரி, ஸ்கந்தபுரம், யூனியன்குளம், பன்னங்கண்டி வட்டக்கச்சி, இராமநாதபுரம், கல்மடுநகர், பளை, முகமாலை, இயக்கச்சி, இத்தாவில் போன்ற கிளிநொச்சியின் பல்வேறு இடங்களுக்கு உலர் உணவு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது…

அத்தோடு கிளிநொச்சியின் பிரதான நகரங்களில் குப்பைகள் அகற்றப்பட்டு கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டன.

Share the Post

You May Also Like