வலிகாமம் வடக்கு, தெற்கில் மனிதாபிமானப் பணிகள்!

வலி.வடக்கு, வலி.தெற்கு ஆகிய பிரதேசங்களில் சுயதொழில் மேற்கொண்டு தற்போது நாட்டின் அசாதாரண சூழ்நிலையால் தொழிலின்றிக் கஷ்டப்படும் குடும்பங்களுக்கு இன்று உலர் வழங்கலின் முதல்கட்டமாகக் குடும்பம் ஒன்றுக்கு 5 கிலோ மா வழங்கப்பட்டது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதித் தலைவரும் வலி.தெற்கு பிரதேசசபை முன்னாள் தவிசாளருமான தியாகராஜா பிரகாஷின் அனுசரணையில் வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர்களான லயன் சி.ஹரிகரன், லயன் செ.விஜயராஜ் ஆகியோரின் ஒழுங்கமைப்பில் வலி.வடக்கு எல்லைக்குட்பட்ட மாதகல், சேந்தாங்குளம், தெல்லிப்பழை அளவெட்டி மற்றும் வலி.தெற்கில் ஏழாலை ஆகிய இடங்களுக்கே இந்த மனிதாபிமான உலர் உணவு வழங்கும் பணிகள் நடைபெற்றன.

இது வெறும் முதற்கட்ட நடவடிக்கை எனவும் மேலும் பல பிரதேசங்களைச் சேர்ந்த குடும்பங்களுக்கு தொடர்ந்துவரும் நாள்களில் வழங்க உள்ளதாகவும், தற்போது கோதுமை மா வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அரிசி உட்பட்ட ஏனைய பொருள்கள் வழங்கப்படும் என்று தி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Share the Post

You May Also Like