யாழ்.மாநகரசபை பொறுப்புக்களை பதில் முதல்வரிடம் ஒப்படைத்தார் ஆனோல்ட்!

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் யாழ். மாநகர முதல்வர் இம்மானுவெல் ஆர்னோல்ட், தன்னிடம் அனைத்து பொறுப்புக்களையும் ஒப்படைத்துள்ளார் என யாழ். மாநகர சபையின் பதில் முதல்வர் து.ஈசன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர சபையில் வைத்து நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்து தனக்குக் கீழுள்ள அதிகாரங்கள் அனைத்தையும் மே 15ஆம் திகதி முதல் பதில் முதல்வராக என்னிடம்  ஆர்னோல்ட் ஒப்படைத்ததாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன், “வேட்புமனு செய்யப்பட்டதன் பின்னரான இடைப்பட்ட காலத்தில் முதல்வர் ஆர்னோல்ட் முதல்வராக செயற்பட்டது உண்மை எனவும் தான் பிரதி முதல்வராகத்தான் செயற்பட்டதாகவும் ஈசன் குறிப்பிட்டார். ஆனால் தற்போது தன்னுடைய வாகனங்கள் உள்ளிட்ட சகலதையும் ஆர்னோல்ட் ஒப்படைத்துவிட்டார்.

இனிவரும் காலங்களில் கட்சி பேதங்களுக்கு அப்பால் சென்று அனைத்து உறுப்பினர்களுடனும் இணைந்து மாநகர மக்களுக்காக சேவையாற்ற தோழமையுடன் கைகோர்த்து செயற்படவுள்ளதாக து.ஈசன் தெரிவித்துள்ளார்.

Share the Post

You May Also Like