கல்முனையில் எம்.இராஜேஸ்வரனின் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

இலங்கை தமிழரசுக்கட்சியின் கல்முனை தொகுதிக்கான தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான எம்.இராஜேஸ்வரனின் மக்கள் சந்திப்பு பணிமனையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நேற்று (18.05.2020) எம்.இராஜேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் மாணவர் மீட்பு பேரவை தலைவர் பொறியியலாளர் எஸ்.கணேஸ் இலங்கை தமிழரசுக்கட்சியின் கல்முனை தொகுதிக்கான உப தலைவர் கே.கனகராஜா இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிபர் முன்னணி துணைச்செயலாளர் அ.நிதான்சன் ஆகியோர் ஈகைச் சுடர் ஏற்றி இறுதி யுத்தத்தில் அவமாய் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Share the Post

You May Also Like