“யுத்த வெற்றிவிழாவை கொண்டாட முடியுமென்றால் ஏன் உயிரிழந்தவர்களை நாம் நினைவு கூரக்கூடாது”

யுத்த வெற்றிவிழா அரசினால் முன்னெடுக்கப்படும்போது ஏன் யுத்தத்தில் உயிர்நீத்தவர்கள் நினைவுகூரப்படக்கூடாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

முல்லைத்தீவில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர், பொதுத்தேர்தலை இக்காலப்பகுதியில் நடத்துவது சாத்தியமானது அல்ல எனவும் தெரிவித்தார்.

மேலும் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எப்படியாவது தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்ள தேர்தலை நடத்திவிட வேண்டும் என்ற கடப்பாட்டில் இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

Share the Post

You May Also Like