தமிழரசுப் பொதுச் செயலாளரின் முயற்சியால் ஆலங்குளம் மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நிலைமை காரணமாக அன்றாட வாழ்வாதாரத்தினை இழந்துள்ள மக்களுக்கான நிவாரணம் வழங்குப் பணிகள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் அவர்களின் முயற்சிகள் மூலம் பல்வேறு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆலங்குளம் பிரதேச மக்களுக்கு இன்றைய தினம் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

கெயார் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் தாமோதரம்பிள்ளை தங்கவேல் அவர்களின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட இச்செயற்திட்டமானது அமெரிக்காவில் இயங்கி வருகின்ற ஸ்ரீகைலாஷா எனும் அமைப்பின் நிதியுதவியின் மூலம் நடைறைப்படுத்தப்பட்டதாகும். இதன் போது வந்தாறுமூலை நலன்புரிச் சங்கத்தினர் மற்றும் ஆலங்குளம் பிரதேச முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கி.துரைராசசிங்கம் அவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் மேற்படி அமைப்பானது நிதியுதவியளித்து ஆலங்குளம் பிரதேசத்தில் சுமார் 150 குடும்பங்களுக்கு இவ்வாறான உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share the Post

You May Also Like