புகையிரத கடவை பாதுகாப்பாளருக்கு தமிழரசு செயலரின் நிதியில் உதவிகள்!

கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட அசம்பாவித நிலைமை காரணமாக வாழ்வாதாரம் பாதிகப்பட்ட புகையிரதக் கடவைப் பாதுகாப்புத் தொழிலாளர்களுக்கு பொருளுதவிகள் வழங்கும் செயற்பாடு இன்றைய தினம் இடம்பெற்றது.

மேற்படிப் புகையிரதக் கடவைப் பாதுகாப்புத் தொழிலாளர் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் அவர்களின் வேண்டுகோள் மற்றும் ஏற்பாட்டில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராசசிங்கம் அவர்களின் நிதிப்பங்களிப்பின் மூலம் மேற்படி உதவிகள் வழங்கப்பட்டன.

வந்தாறுமூலை நலன்புரிச்சங்கத்தினரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட இவ் உதவிச் செயற்திட்டத்தில் சுமார் 70க்கும் மேற்பட்ட புகையிரதக் கடவைப் பாதுகாப்புத் தொழிலாளர்களுக்குப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Share the Post

You May Also Like