அரசியல் முகவர்களை அடையாளம் கண்டு தக்க பாடம் புகட்ட வேண்டும் – கிளிநொச்சி மக்கள் சந்திப்பில் தபேந்திரன்

“சமூகத்தின் உரிமை,விடுதலை அரசியலை முன்னெடுத்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தோற்கடிப்பதற்கு, தென்னிலங்கை முகவர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். அவர்களை மக்கள் அடையாளம் கண்டு தக்க பாடம் புகட்ட வேண்டும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் வேதநாயகம் தபேந்திரன் தெரிவித்தார்.

தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் கிளிநொச்சியில் மக்கள் சந்திப்பில் உரையாற்றிய அவர்,

“எனது கன்னி அரசியல் பிரவேசம் கடும் சவால் நிறைந்ததாகவுள்ளது. தமிழர்களின் உரிமைப் ரோட்டத்தை கொச்சைப்படுத்தும் நோக்கில் களமிறக்கப்பட்டுள்ள முகவர்களை நாம் அடையாளம் காண வேண்டும். இவர்களைத் தோற்கடிப்பதில்தான் எமது சமூகத்தின் எழுச்சியும் உள்ளது.

அற்ப இலாபங்களுக்காக தமிழர்களின் ஒட்டுமொத்த இலட்சியங்களை நாம் இழந்திவிட முடியாது. எனவே, எனது முயற்சியில் நம்பிக்கை ஏற்படுத்துவது, வாக்காளர்களின் கைகளிலே உள்ளது. பேரினவாத சக்திகளுக்கு ஆதரவாகக் களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் வெல்வது, எமது நீண்ட கால உரிமைப் போராட்டத்தை மலினப்படுத்தும். எனவே, இவ்விடயத்தில் தமிழர்கள் நன்கு சிந்தித்துச் செயற்படுவது அவசியம்.

யாழ். சுண்டுக்குழியை பிறப்பிடமாகக் கொண்ட நான்,போராட்ட காலத்து  தமிழர்களின் வலிகளை நன்கு அறிந்து வைத்துள்ளேன். வேறு கட்சிகளில் போட்டியிடுபவர்கள் போன்று, திக்குத் திசை தெரியாத இடத்திலிருந்து வந்து போட்டியிடவில்லை” – என்றார்.

Share the Post

You May Also Like