“சிங்கள தலைவர்களே சமஷ்டியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அது எப்படி சிங்கள மக்களுக்கு பாதகமாக அமையும்”

இந்த நாட்டுக்கு உகந்தமுறை சமஷ்டி என சிங்கள தலைவர்களே கூறியுள்ள நிலையில் அது எவ்வாறு சிங்கள மக்களுக்குப் பாதகமாக அமையும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்டத்திற்கான பிரசாரக்கூட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) உவர்ம்லை டைனமிக் விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய சுமந்திரன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவற்றினை எல்லாம் தெரிந்துகொண்டே சிங்கள மக்களை தவறாக வழிநடுத்துகின்றார் என கூறினார்.

மேலும் மஹிந்த ராஜபக்ஷ சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தையும் பயத்தினையும் ஏற்படுத்துகின்றார் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Share the Post

You May Also Like