நேற்று காலை யாழ் பஸ் நிலையத்திலிருந்து கவனயீர்ப்பு போராட்டம் .

நேற்று காலை யாழ் பஸ் நிலையத்திலிருந்து 11 மணிக்கு ஆரம்பித்து யாழ் மாவட்ட செயலகத்தில் நிறைவுற்ற கவனயீர்ப்பு போராட்டத்திலேயே அதிகளவான பாதிக்கப்பட்ட உறவுகள் , பொதுமக்கள் , சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் , பல்வேறு கட்சிகளை சார்ந்த அரசியல்வாதிகள் ( மாவை சேனாதிராசா , CVK சிவஞானம் , செல்வம் அடைக்கலநாதன் , சரவணபவன் , சுரேஷ் பிரேமச்சந்திரன் , சிவாஜிலிங்கம் ,ஐங்கரநேசன் , அனந்தி , விமலேஸ்வரி , விந்தன் , வவுனியா மயூரன் , இன்னும் பலர் , தமிழ் அரசக் கட்சி வாலிப முன்னணியினர் ) கலந்துகொண்டிருந்தனர் .

இங்கு எந்த அரசியல்வாதியும் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கவில்லை . அரசியல்வாதிகள் ஊடகங்களுக்கு கூட தமது கருத்துக்களை வழங்கியிருக்கவில்லை .

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரே சகல விடயங்களிலும் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர் .

மிகவும் வெற்றிகரமாக ஒருமித்த கருத்தில் இந்த போராட்டம் நடாத்தப்பட்டிருந்தது . குறிப்பாக சைக்கிள் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற திரு. வி. மணிவண்ணன் , வரதராஜன் பார்த்தீபன் போன்றவர்களும் இதிலேயே கலந்துகொண்டிருந்தனர் .

Share the Post

You May Also Like