தமிழ் தேசிய கூட்டமைப்பின் முயற்சியினால் கடந்த அரசினால் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம்(OMP) அமைப்பு..

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முயற்சியினால் கடந்த அரசினால் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம்(OMP) அமைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்ற போது அதனை நிராகரித்து மிகவும் குறுகி சிந்தனையுடன் அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழ் அவ் அலுவலக செயற்பாட்டை நிராகரிக்குமாறு காணாமல் போனோர் உறவுகளை கோரி மிகப்பெரிய அநீதியை இழைத்து ஓர் வரலாற்று தவறை ஏற்படுத்திய கஜேந்திரகுமார் கோஷ்டி இன்று காணாமல் ஆக்கப்பட்ட மக்களின் உருவப்படங்களிற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர் இன்றைய அந்த நிகழ்வின் மூலம் கஜேந்திரகுமார் கோஷ்டியின் நிலைப்பாடு புரிந்துகொள்ள தக்கது அதாவது காணாமல் ஆக்கப்பட்டோர் பெரும்பாலும் இறந்துவிட்டார்கள் என்ற இன்றைய அரசின் கருத்துடன் திரு கஜேந்திரகுமார் அவர்களது நிலைப்பாடும் ஒத்து போவதை அவதானிக்க முடிகிறது.

உண்மையில் காணாமல் போனோர் உறவுகள் அனைவரும் OMP அலுவலகத்தில் பதிந்து உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டதை உறுதிப்படுத்தி சான்றிதழ் பெற்றிருந்தால் இன்றைய அரசு உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டதை நிராகரிக்கின்ற ஏதுநிலை ஏற்பட்டிருக்காது என்ன செய்வது கூட்டமைப்பு குறிப்பாக திரு சுமந்திரன் திரும்ப திரும்ப பல தடவைகள் காணாமல் போனோர் உறவுகளை பதிந்து சான்றிதழ் பெறுமாறு கோரியிருந்தார் ஆனால் சிறு தொகையினரே அவ்வாறு செயற்பட்டனர் என நினைக்கிறேன்.

காணாமல் போனோர் அலுவலகமும் இழப்பீட்டு அலுவலகமும் தொடர்ந்து இயங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Share the Post

You May Also Like