மழை காரணமாக ஆயித்திய மலை மகிழவெட்டுவான் வீதி நெல்லூர் பகுதியில் சிதைவு, நேரடி விஜயம் மேற்கொண்ட பா.உ கருணாகரம் அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை…

மட்டக்களப்பில் பெய்து வரும் கடும் மழை காரணமாக வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆயித்தியமலை, மகிழவெட்டுவான் வீதியானது நெல்லிக்காடு (நெல்லூர்) பிரதேத்தில் நீர் வடிந்தோடிய நிலையில் குறுக்காகச் சிதைவுற்று மக்கள் பயன்படுத்த முடியாதளவில் சிதைவுற்றது.

இது தொடர்பில் பிரதேச மக்களினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளினைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் மற்றும் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோர் அவ்விடம் விஜயம் மேற்கொண்டு வீதியின் நிலைமை தொடர்பில் ஆராய்ந்தனர்.

அத்துடன் வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் கருணைநாதன் அவர்களை உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வீதி நிலைகைள் தொடர்பில் விளக்குகையில் இவ்வீதியானது ‘ஐ புரஜெக்ட்’ என்னும் வீதி அபிவிருத்தித் திட்டத்தில் உட்படுத்தப்படுள்ளமையைப் பணிப்பாளர் பாராளுமன்ற உறுப்பினருக்குத் தெளிவுபடுத்தினார்.

Share the Post

You May Also Like