யாழ். மாநகர மேயர் அதிரடி அறிவிப்பு!

யாழ்ப்பாணம் மாநகரத்துக்கு வெளிமாவட்டத்தில் இருந்து வரும் அனைவரும் இன்றிலிருந்து 14 நாட்கள் கட் டாய சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று யாழ். மாநகர மேயர் இ.ஆனோல்ட் அறிவித்துள்ளார்

இன்று யாழ்ப்பாணம் மாநகரப் பகுதியில் நான்கு கடைகள் சீல் வைக்கப்பட்டு குறித்த பகுதியை முடக்குவதற்கான செயற்பாடுகள் தொடர்பில் ஆராயும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநருடன் தான் கலந்துரையாடவுள்ளார் எனவும், குறித்த மாநகரப் பகுதியில் தொற்று ஏற்படாதவாறு முன்னெடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகளை உடனடியாக ஆராயும்படி ஆளுநர் பணித்தமைக்கு அமைய குறித்த நடைமுறை இன்றிலிருந்து பின்பற்றப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share the Post

You May Also Like