கிளிநொச்சி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அமைப்பினால் கொரோனா தடுப்பு விசேட வேலைத்திட்டம் இன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி நகரின் பல பகுதிகளிலும் கொரோனா விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன், முக கவசங்களும் வழங்கி வைக்கப்பட்டன.