காரைதீவு பிரதேசசபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் ஏக மனதாகஅனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றம்

காரைதீவு பிரதேசசபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் ஏக மனதாகஅனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது .

33வது சபை அமர்வின் போது புதிய ஆண்டிற்கான  வரவுசெலவுத்திட்ட அறிக்கையை காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிரில்   தலைமையில் செவ்வாய்கிழமை இன்று(10)  சமர்ப்பிக்கப்பட்டது.

இதன் போது சபையின் தவிசாளர் உள்ளிட்ட 12 உறுப்பினர்களின் பங்களிப்பில் ஏகமானதாக வரவு – செலவுத் திட்ட அறிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது

இதில்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 02 உறுப்பினர்கள்,ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி  -02, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் -01, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு -4 ,தோடம்பழம்  சுயேட்சை குழு -01 , காரைதீவு சுயேட்சை குழு 2 , என மொத்தமாக 12 உறுப்பினர்கள் சபையில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது சபை நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக அம்பாரை மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்  மட்டக்களப்பு மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.மேலும்   தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தகர்கள் ஊர் பிரமுகர் என பலரும் கலந்து கொண்டனர்.

Share the Post

You May Also Like