குற்றவியல் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பது வெளிநாட்டு கோட்பாடா?

2015 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் இணை அனுசரனை வழங்கிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 30/1 பிரகடனத்தில் நீதிப்பொறிமுறை உட்பட சிவில் யுத்தத்தின் போது இருதரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பான விசாரனைகளை மேற்கொள்வதற்கு வாக்குறுதி வழங்கியுள்ளது.   மீறப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படும் இறுதி யுத்தத்தின் போதான சர்வதேச குற்றங்கள் மீதான குற்றவியல் பொறுப்புக்கூறல் யோசனைக்கு ஜனாதிபதி சிறிசேன மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்டஅமைச்சர்கள் தமது கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வந்துள்ளனர். இவ்விடயம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு பெரும்பான்மையான இலங்கை மக்களின் எதிர்ப்பையே பிரதிபலிப்பதாகதந்திரோபாயமாக சித்தரித்துக்காட்டப்படுகின்றது. இலங்கையின் பிரதான பொதுத்தளத்தில் காணப்பட்ட எதிர்வினைகள் காரணமாக குற்றவியல் விசாரனை தொடர்பான யோசனை இயல்பாகவேவெளிநாட்டு கோட்பாடு என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. எவ்வாறாயினும் குற்றவியல் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பது இலங்கையில் மிக ஆழமான சட்ட மற்றும் மத ரீதியிலானபாரம்பரியத்தினை கொண்டுள்ள அதேவேளை பாரிய இடைவெளிகள் நிலவும் நல்லினக்கம் மற்றும் மன்னித்தல் பற்றிய விடயங்களை பிரதிபலிப்பதே இக்கட்டுரையின் நோக்கம். இலங்கையின் வரலாற்று ஆவணங்கள் நீதியை நிலைநாட்டுவதற்கான நவீனமான முறைகள் புராதன காலத்தில் காணப்பட்டன என பல இடங்களில் பல தடவைகள் குறிப்பிட்டுள்ளன.ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் ஏகாதிபத்திய இராஜ்ஜியத்தின் கீழ் இம்முறைமை நடைமுறைக்கு வந்தது முதல் அது  அதிகார பிரிப்பு தொடர்பான கோட்பாட்டை முழுமையாகபிரதிபலிக்கவில்லை. தொடர்ச்சியாக அரசன் மற்றும் சிரேஷ்ட நிர்வாக உறுப்பினர்கள் (விதானைகள், மோஹட்டாலே, அதிகாரி, திசாவே) ஆகியோர் நீதி அதிகாரத்தை பயன்படுத்தி வந்துள்ளனர். எவ்வாறாயினும் இப்புராதன முறைமை சமூக ஒன்றினைப்புக்கள் மற்றும் சுமூக உறவுகள் என்ற அர்த்தத்துடன் குற்றவியல் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவித்திருக்கின்றது. கிராம சபை(Gamsabawa) என்ற அமைப்பு கிராம மட்டத்தில் ஏற்படுகின்ற சிறிய குற்றங்களை தவிர்ப்பதற்கு இலகுவான சமூக நட்புறவு செயற்பாடுகளை அங்கிகரித்து வந்துள்ளன. இலகுவான மற்றும்எளிமையான முன்னெடுப்புக்களின் நோக்கம் குற்றவியல் நீதி மற்றும் பொறுப்புக்கூறலினூடாக மேலும் மேலும் விரோதங்களை வளரச்செய்யாமையாகும். அரச சபையாக கருதப்படும் உயர்சபையில் தற்கால நவீன குற்றவியல் விசாரனை முறைகளுக்கு சமமான வகையில் விசாரனைகள் நடைப்பெற்றுள்ளதென்பதனை சுட்டிக்காட்டியுள்ளது. கண்டி இராச்சிய காலத்தின் போது « மகாநடுவ » என்ற சபையில் குற்றவியல் விசாரனைகள் குற்றம் புரிந்தவர் மீதே முதலில் வழக்கு தொடரப்படுவதாக குறிப்படப்பட்டுள்ளது.   ஏற்கனவே குறிப்படப்பட்டுள்ள கோடிட்டுக்காட்டக்கூடிய கொள்கை முறையில் சந்தேகத்திறகிடமின்றி சமூக நீதி, சட்டத்தின் ஆட்சியில் வழி நடத்தப்பட்டு வந்துள்ளது. கலாநிதி A.R.B அமரசிங்ஹ(இலங்கையின் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி) தனது ‘த லீகல் ஹெரிடேஜ் ஒப் ஶ்ரீ லங்கா’ (பக்கம் 33) என்ற நூலில் ஆரம்ப காலங்களிலிருந்த சில அரசர்களால் வரலாற்று குறிப்புக்கள்தர்மசாஸ்த்திரம் என்ற வழிகாட்டலுடன் பதிவுகளை செய்து வந்துள்ளன. அது புராதன அரசர்களை வழி நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட சட்ட சாஸ்த்திரங்களை உள்ளடக்கிய சபையாகும். சமூக நீதியை பாதுகாப்பதற்காக தண்டனைகளை அமுல்படுத்தல் மற்றும் ஆட்சியாளர் தவறும் பட்சத்தில் அவர் குற்றவாளியென அவருக்கு தண்டனையை வழங்கும் முறைமையைஏற்படுத்துதல் அரசின் கடமையென தர்மசாஸ்த்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் இலங்கை ஆட்சியாளர்களால் பெளத்தத்தை அரவனைத்து அதன் உள்நாட்டு நீதி நிர்வாக முறைமையைதயாரித்திருந்தாலும் அதன் ஏகாதிபத்திய தன்மையினை அது  நீர்த்துப்போகச்செய்யவில்லை. அநூராதபுரத்து கால முக்கிய பெளத்த ஆலய பனிகளின் போதும் (மஜ்ஜிம நிக்காய),பொலன்னறுவை காலத்து இலக்கிய சர்ச்சைகளின் போதும் (அமாவத்துர) இராச்சியம் மற்றும் பொது மக்களின் நலன்கருதியும் தண்டனை வழங்கல்கள் கட்டாயமானதாக காணப்பட்டுள்ளது. கலாநிதி A.R.B அமரசிங்ஹவின் நூலின் அடிப்படையில் (பக்கம் 35) சட்ட ஆட்சி இருந்திருக்காவிடின் நாட்டின் சமூக பொருளாதார செயற்பாடுகளில் எவ்வித தாக்கத்தினையும்ஏற்படுத்தியிருக்காது. தண்டனைகளினூடாக சட்ட ஆட்சியை பாதுகாத்தல் என்பது மதிப்புமிக்க நீதிமன்றம், தர்ம சபை (Dharma Sabha) மற்றும் தர்ம நீதிபதிகள் சமன்பாசாதிக்க (Samanpasadhikka) என அழைக்கப்பட்டது. மென்மேலும் சட்டத்திற்கு முன் சமத்துவமான கோட்பாடுகள் அந்த கால கட்டத்தில் அப்போதைய ஆட்சியாளர்களால் கடுமையாக அமூல்படுத்தப்பட்டுள்ளதாக கலாநிதிA.R.B அமரசிங்ஹவின் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நூல் மேலும் பல உதாரணங்களை வழங்கியுள்ளதுடன் பெளத்த துறவிகளாயிருந்தாலும் அவர்களும் இராஜ துரோக செயற்பாடுகள்முதல் படுகொலைகள் வரை கடும் தண்டனைக்குட்பட்டுள்ளனர்….

இலங்கை மீது சர்வதேச மேற்பார்வையை தக்கவைப்பதில் வெற்றிபெற்ற தமிழர் தரப்பு

இலங்கை  அரசை சர்வதேச மேற்பார்வையுடன் கூடிய நிகழ்ச்சிநிரலுக்குள் வைத்து அழுத்தங்களைக் கொடுக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நகர்வுகள்  சரியென்பது தொடர்ந்தும் நிருபணமாகிவருகின்றது.   இம்முறை ஜனாதிபதியின் பிரதிநிதியாக ஐக்கிய…

இலங்கையில் நிலைமாறுகால நீதிப்பொறிமுறைகள் நிலைநாட்டப்படுமா என மனித உரிமை ஆணையாளர் சந்தேகம்!

ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அடுத்த ஒருவருட காலப்பகுதிக்குள் இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்தும் என்பதில் தாம் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை எனவும் இதன் காரணமாக…

ஐநா தீர்மானம் நிறைவேற்றப்படாமை தொடர்பாக ஜெனிவாவில் கடும் அதிருப்தி

2015ம் ஆண்டில் இலங்கை மீது கொண்டுவரப்பட்ட ஜெனிவா தீர்மானம்  தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைனின் வாய்மூல அறிக்கையை துணை ஆணையாளர்…

இலங்கை தொடர்பான முக்கிய விவாதம் இன்று ஜெனிவாவில் !

ஜெனிவாவில் தற்போது நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37வது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட ஐநா 30/1  தீர்மானம்    தொடர்பான வாய்மூல அறிக்கையை ஐநா…

காலங்கடத்துவதைவிடுத்து அர்ப்பணிப்போடு ஜெனிவா தீர்மானத்தை இலங்கை நடைமுறைப்படுத்தவேண்டும்

2015ம் ஆண்டு இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்த வாய்மூல அறிக்கையை ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செயிட் ராட் அல் ஹுசைன் இன்று ஜெனிவாவில்…

ஜெனிவாவில் இலங்கை குறித்த பூகோள மீளாய்வு விவாதம் ஒத்திவைப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில்  நேற்று நடைபெறவிருந்த பூகோள காலக்கிரம மீளாய்வு தொடர்பான விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை…

இலங்கை குறித்த முக்கிய விவாதம் இன்று ஜெனிவாவில் !

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37 வது அமர்வு  கடந்த மாதம் 26ம்திகதி முதல் ஜெனீவாவில் நடைபெற்றுவருகின்றது. இம்முறை இலங்கை தொடர்பான 32 பக்க நிகழ்வுகளுடன்…

தமிழர்களுக்கு இருக்கும் ஒரே ஒரு சக்தி சர்வதேசம்தான் – இம்மானுவேல் அடிகளார்

இலங்கை அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தோல்வி அடைந்தாலும் தமிழர்களுக்கு இருக்கும் ஒரே ஒரு சக்தி சர்வதேசம்தான் என உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவேல் அடிகளார் தெரிவித்துள்ளார்….

ஜெனீவா கூட்டத்தொடரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் கடந்த மாதம் 26ம் திகதி ஆரம்பமாகி தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இம்முறை அமர்வுகளில் இலங்கை தொடர்பாக மனித…